பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு இது தான் மரியைதையா என பதிவிட்டது குறித்து எம்.பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சியில் தந்தை பெரியாரின் சிலை காவி சாயம் அடித்து அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்… அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் பாஜக மாநில தலைவர் முருகனும் இது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருந்த நிலையில் மக்களவை உறுப்பினர் கனிமொழியும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அதில், திருச்சியில் #பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார். இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும் மரியாதையா ? நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா? என பதிவிட்டிருந்தார்.
மக்களவை உறுப்பினர் கனிமொழி பதிவிட்ட கருத்து பெரியார் சிலையை பாஜக தான் அவமரியாதை செய்துள்ளதாக கருத்து எழுந்த நிலையில் இதற்கும் பாஜகவுக்கு எந்த சம்மந்தமும் இல்லை. யாரோ தனிப்பட்ட விஷமிகள் இதனை செய்துள்ளார்கள் என பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் அவர் பெரியாரை பற்றி சொல்லியிருந்ததை உதாரணமாக எடுத்துக் காட்டி இன்று நடந்த பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை எடுத்துக் காட்டி இருக்கின்றேன்.
இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. பெரியார் சிலையை தொடர்ந்து அவமதிப்பதும்… இதற்க்கு முன்பு பிஜேபியில் இருக்கக்கூடிய பல தலைவர்கள் பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள். இன்னைக்கு திடீரென்று ஒருத்தர் வந்து தனிப்பட்டவராக பெரியார் சிலையை அவமதித்துள்ளார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
மரியாதையா ?
நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா?
2/2#Periyar
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 27, 2020