இந்தியா-சீனா இடையேயான மோதல் ஏற்பட்டால் அதிபர் ட்ரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதில் உத்திரவாதம் இல்லை என அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா இடையேயான மோதல் மேலும் அதிகரித்தால் ட்ரம்பின் ஆதரவு இந்தியாவிற்கு கிடைக்கும் என்பதில் எவ்விதமான உறுதியும் இல்லை என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “டொனால்டு டிரம்ப் எவ்வித வழியில் செல்வார் என்பது எனக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது. வர்த்தகத்தின் மூலமாகவே சீனாவுடனான புவிசார் மூலோபாய உறவை பார்க்கிறார். அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிடம் உள்ள அறிவு சார்ந்த சொத்துக்களை சீனா கைப்பற்றியது. பலவிதமான தொழில் நுட்ப இடமாற்றத்தை ஈடுபட்டது. இதுவே சீனாவின் வெற்றிக்கு முக்கியமானதாகும்.
எனவே வர்த்தகம் முக்கியமானது. உய்குர்களை வதை முகாமில் அடைத்ததற்காகவோ ஹாங்காங்கை அடக்குவதற்காக சீனாவை ஒரு போதும் விமர்சிக்க மாட்டேன் என டிரம்ப் கூறியுள்ளார். நவம்பர் மாத தேர்தலின் பிறகு அவர் என்ன செய்வார் என எனக்கே தெரியாது இத்தகைய நேரத்தில் இந்தியா மற்றும் சீனா இடையேயான மோதல் அதிகரித்தால் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எவ்வித உறுதியும் இல்லை என நான் உறுதி கூறுகிறேன். எல்லை மோதலின் முக்கியத்துவத்தை எவ்வளவு புரிந்து கொள்ளப் போகிறார் என்றும் மோதலின் வரலாறு பற்றியும் அவருக்கு தெரியாது என்றும் நான் நினைக்கவில்லை” என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.