ரஷ்ய நாட்டினுடைய முன்னாள் அதிபர் இன்னும் இரண்டே வருடங்களில் உக்ரைன் நாடு உலக வரைபடத்தில் காணாமல் போகலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். எனினும் ரஷ்யப் படைகள் டான்பாஸ் நகரை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், பதில் தாக்குதல் நடத்த உக்ரைன் திணறிக்கொண்டிருக்கிறது. எனவே அமெரிக்கா அந்நாட்டிற்கு ஆயுத உதவிகள் செய்து கொண்டிருக்கிறது.
இதனிடையே ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ், இதுபற்றி தெரிவித்ததாவது உக்ரைன் அரசு, தங்கள் முதலாளிகளிடம் இருந்து இன்னும் இரண்டு வருடங்களில் டெலிவரிக்குரிய பணத்தோடு எல்என்டி பெற்றுக்கொள்ள விரும்புவதாக அறிந்தேன். இத்திட்டம் நிறைவேறாது.
இன்னும் இரண்டு வருடங்களுக்கு உக்ரேன் உலக வரைபடத்தில் நீடிக்குமா? அமெரிக்க மக்களுக்கு இது குறித்து கவலை கிடையாது. அவர்கள் ரஷ்யாவை எதிர்க்கும் திட்டத்தில் அதிக முதலீடு செய்கிறார்கள். பிற விஷயங்கள் அவர்களுக்கு ஒன்றும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.இன்னும் 2 வருடத்திற்கு உலக வரைபடத்தில் உக்ரைன் இருக்குமா?…. ரஷ்யாவின் முன்னாள் அதிபர் கருத்து…!!!