Categories
உலக செய்திகள்

போரில் ரஷ்யாவிற்கு பின்னடைவா?…. 75,000 வீரர்கள் பலியானதாக அமெரிக்கா தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போரில் தற்போது வரை ரஷ்ய வீரர்கள் 75,000 பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. உக்ரைன் படைகளும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, சுமார் 1,50,000 வீரர்களை உக்கிரேன் போரில் களமிறக்கியதாக இதற்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிகாரிகள் இந்த போரில் ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்பில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போரில் இதற்கு முன்பு 40,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

எனினும், ரஷ்யா தற்போது வரை உயிரிழந்த வீரர்கள் தொடர்பில் அதிகாரபூர்வமான தகவலை வெளியிடவில்லை. மேலும், நூற்றுக்கணக்கான வீரர்கள் மட்டும் தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால், அமெரிக்க தரப்பில் 75,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |