Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா பேசுனது ஸ்டாலின் குடும்பத்துக்கும் பொருந்துமா ? உடனே கண்டிக்க சொன்ன கே.பி முனுசாமி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் கே.பி முனிசாமி, ஆ.ராசா அவருடைய பேச்சு என்பது மற்றவர்களுடைய மனதை புண்படுத்துகின்ற வகையிலே இருப்பதோடு மட்டுமல்லாமல்,  மற்றவர்களுடைய உரிமையை அவர் பறிக்கின்ற வகையிலே பேசிக்கொண்டு இருக்கிறார்.

அது மிகவும் கண்டிக்கத்தக்கது. திரு ராஜா அவர்களுடைய தலைவராக இருக்கக் கூடிய திரு .ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க வேண்டும். அப்படி அவர் கண்டிக்காத காரணத்தினால் தான் எங்களுடைய பொதுச்செயலாளர் கூட்டத்தில் கூட சொல்லும் போது, திரு.ராஜா சொன்ன கருத்துக்கள் திரு ஸ்டாலினுடைய குடும்பப் பெண்களுக்கும் சேருமா? என்ற ஒரு வினாவை எழுப்பி இருக்கிறார்.

இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரு வாய்ப்பை உருவாகாதவாறு  ஸ்டாலின் அவர்கள் உதவியாக இருக்கிறார்கள். அதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய கண்டிப்பான கருத்து என தெரிவித்தார்.

Categories

Tech |