Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…!! இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் வீட்டில் நடைபெற்ற விசேஷம்… குவியும் வாழ்த்துக்கள்…!!!

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மூத்த மகளான கதீஜாவுக்கு திருமண நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் இசை புயலாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். ரோஜா படத்தின் மூலம் தனது இசையால் உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்தவர். கிட்டத்தட்ட 30 வருடங்களாக தான் இசையமைத்த அனைத்து பாடல்களும் ஹிட் கொடுத்த இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

இதற்கிடையில் கடந்த 1995ஆம்ஆண்டு சாய்ரா பானு என்பவரை ஏ ஆர் ரகுமான் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் ஏ ஆர் ரகுமானின் மூத்த மகளான கதீஜாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆடியோ இன்ஜினியராக பணியாற்றி வரும் ரியாசுதன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் திருமண போட்டோக்களை ஏ ஆர் ரஹ்மான் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |