அரசு இசைப்பள்ளியில் நேற்று சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆயுத பூஜையை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாட இருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்து நகரில் மாவட்ட அரசு இசைப்பள்ளி அமைந்துள்ளது. அங்கு நேற்று சரஸ்வதி பூஜை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அங்கு வந்திருந்த இசை கழைஞர்கள் இசை கருவிகளை வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில் இசைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் இசைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.