Categories
சினிமா தமிழ் சினிமா

இசைப்புயல் பிறந்தநாள்… ‘கோப்ரா’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..‌!!!

ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாளை முன்னிட்டு ‘கோப்ரா’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படம் தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். மேலும் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார் . கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விக்ரம் 7 வித்தியாசமான தோற்றங்களில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகி ரசிகர்களால் கவரப்பட்டது .

 

இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான  ‘தும்பி துள்ளல்’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இன்று இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் பிறந்தநாளை முன்னிட்டு ‘கோப்ரா’ படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளது . அதில் வருகிற ஜனவரி 9ஆம் தேதி ‘கோப்ரா’ டீஸர் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |