Categories
உலக செய்திகள்

ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்…. பிரித்து வரலாறு படைத்த மருத்துவர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

இரட்டை தலையுடன் ஒட்டிப் பிறந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்த இந்திய மருத்துவர் ஜிலானிக்கு பாராட்டுகள் குவிகின்றது.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஜிலானி என்பவர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். இவர் இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஆவார். மேலும்  இவர் லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் மருத்துவாராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு மருத்துவர்கள் அவரது உதவியை கேட்டுள்ளனர். அதாவது இஸ்ரேல் நாட்டில் இரட்டை தலையுடன் ஒட்டி குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதற்காக அவருக்கு இஸ்ரேல் நாட்டு மருத்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட நிபுணர் ஜிலானி இஸ்ரேல் மருத்துவர்கள் குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரித்துள்ளார். அதன்பின் இவரது இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுக்குறித்து பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறியதாவது “மருத்துவ நிபுணர் சிலரின் உதவியுடன் இஸ்ரேலில் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளின் தலையை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடிந்துள்ளது.

இந்த செயலுக்காக இஸ்ரேலியாவின் சோர்கா  மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரை பாராட்டியுள்ளனர். இதற்கு முன்னதாக மருத்துவர் ஜிலானி அவரது சக பேராசிரியர் டேவிட் டுனாவே  ஆகியோருடன் இணைந்து நான்கு தலை இணைக்கப்பட்ட இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரித்து வரலாறு படைத்துள்ளார். இதன் காரணமாக அவர் உலகப் புகழ்பெற்ற நிபுணராக கருதப்பட்டுள்ளனர். மேலும் சரியான சமயத்தில் எங்களுக்கு உதவிய மருத்துவர் ஜிலானியின் பண்பை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதனையடுத்து மனிதர்கள் நிறம் மற்றும் மதம் என எதுவாக இருந்தாலும் அனைவரும் சமம். ஆனால் மனிதர்கள்தான் அவற்றில் வேறுபாடு பார்க்கின்றனர். இருப்பினும் மருத்துவர்களின் பார்வையில் நாம் அனைவரும் சமம்” என தெரிவித்துள்ளது.

Categories

Tech |