ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சீக்கிய வழிபாட்டு தளத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் குருத்வாரா என்னும் சீக்கிய வழிபாட்டுத்தலம் இருக்கிறது. அங்கு நேற்று காலையில் 30 நபர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது, அங்கு திடீரென்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு நபர்கள் உயிரிழந்ததோடு, 7 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை கொல்ல இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தீவிரவாத அமைப்பு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.