Categories
உலக செய்திகள்

”நாயைப் போல் சுட்டுக் கொன்றோம்” – ட்ரம்ப் ஆவேசம் …!!

 ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கரை நாயைப் போன்று சுட்டுக் கொன்றோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளர்.

சிரியாவில் வசிக்கும் பூர்வக்குடி குர்து மக்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்கிவருகின்றனர். இதையடுத்து, அந்நாட்டு அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவர்களை அழிக்கும் நோக்கில் குர்து கிளர்ச்சியாளர்களோடு கைகோர்த்து அமெரிக்கப் படை களமிறங்கியது. சிரியாவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் மக்கள் அந்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர்.

Image result for Abu Bakar ISIS

இந்நிலையில், கடந்த மாதம் அந்த இயக்கத்தின் தலைவரான அபு பக்கர், அப்பாவி சன்னி இஸ்லாமியர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எந்தவித செயலிலும் ஈடுபடுங்கள் என்று சிரியா மதவாத இயக்கங்களிடம் அறிவுறித்தினார்.

அதைத் தொடர்ந்து அபு பக்கர் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 25 மில்லியன் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்தது. அவரைப் பிடிக்க இறுதிகட்ட முயற்சியில் ஈடுபட்ட சிறப்புப் படையினர் அவரை கொன்றுவிட்டதாக, ஃபாக்ஸ் (fox) ஊடகம் செய்தி வெளியிட்டது. இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தும் வகையில், ‘தற்போது மிகப்பெரிய விஷயம் ஒன்று நடந்துள்ளது’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டார்.

Image result for president trump

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், “நேற்றிரவு அமெரிக்க படை உலகின் மிக முக்கிய பயங்கரவாதியை கொன்றது. இரக்கமற்ற, கொடூர பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் வீழ்த்தப்பட்டார். இனி அவரால் அப்பாவி மக்களுக்கு எந்த தீங்கும் நிகழாது. ஒரு நாயை சுட்டுக்கொல்வது போல் கொன்றோம். கோழையைப் போன்று அவர் இறந்தார்” எனத் தெரிவித்தார்.

Categories

Tech |