Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்!

டெல்லியில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கை மீறும் நபர்களை தடுப்பதற்கு நாடு முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் தகவல் வெளியாகிவுள்ளது. இது குறித்து டெல்லி காவல் துணை ஆணையர் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பிரதமர் மோடி 21 நாள்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார்.

இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் காவலர்கள் தடுப்புகள் வைத்து காவல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலைநகரில் தாக்குதல் நடத்த வாய்ப்ப்பு இருப்பதாக உளவுத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தனிமைபடுத்தல் விதிகளை மீற காவலர்கள் அனுமதிக்கமாட்டார்கள்” என்றார்.

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 1637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதில் 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 132 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Categories

Tech |