ஆப்கானிஸ்தானில் 17 சதவிகித மாவட்டங்கள் ஐ.எஸ்.கே கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மசூதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சுமார் 50 பேர் பலியாயினர். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த சம்பவத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் ஷியா பிரிவை பின்பற்றும் சிறுபான்மையினர் ஆவர். மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்கே எனும் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலீபான்களுக்கு சவாலாக உருவெடுத்துள்ளது இந்த ஐஎஸ்கே அமைப்பு. ஏற்கனவே ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியேற்றப்பட்ட அமெரிக்க படையினரையும் குறிவைத்து இந்த அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சதாம் ஹுசைன் வீழ்ச்சிக்குப் பின்னர் திடீரென உருவாக்கப்பட்ட இஸ்லாமிய தேசம் என்று அழைக்கப்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவுதான் இந்த ஐஎஸ்கே அமைப்பாகும். மேலும் ஈரான் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ,துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற ஐக்கிய நாடுகள இந்த அமைப்பின் பார்வையில்தான் உள்ளது. மேலும் இந்த அமைப்பின் தளமாக ஆப்கான்- பாகிஸ்தான் எல்லையில் உள்ள டங்கர்கர் மாகாணம் செயல்பட்டு வருகிறது . இந்த அமைப்பு தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே ஆப்கானிஸ்தானின் வடக்கு, வட கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஊரக மாவட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.
இது மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள் என்று எந்த பாரபட்சமும் பார்க்காமல் கொடூரத் தாக்குதல் நடத்தியதன் மூலம் அச்சத்திற்குரிய அமைப்பாக உருவெடுத்துள்ளது. மேலும் இந்த அமைப்பு 2018 ல் தாக்குதல் ஒன்றை நடத்தியது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் 75% உயிரிழப்புகள் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்தன. இதனை தொடர்ந்து இந்த அமைப்பு 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும் ஒரு தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 36% தற்கொலைப்படை தாக்குதல் ஆகும். மேலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதன் மூலம் உலகின் நான்கு கொடூரமான பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது ஐஎஸ்கே பயங்கரவாத அமைப்பு.
இந்த அமைப்பு தலிபான்கள் இயக்கத்திலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்களை தனது இயக்கத்தில் சேர்த்து தன் படைகளை பெருக்கி கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் முழுமையாக வெளியேறிய பின்னர் சுமார் 2000 பேர் ஐஎஸ்கேவில் இருப்பார்கள் என மத்திய கிழக்கு அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளின் தலைவர் மெக்கன்சி கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தலிபான்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
அடிப்படை மதவாத கொள்கைகளை கொண்டஅமைப்புகளாக இருக்கும் இந்த இரண்டு அமைப்புக்கும் ஒரு சிறிய வேறுபாடு தான் உள்ளது. அது என்னவென்றால் போர்க்களத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்காண பாதைக்கு தலீபான்கள் சென்றுவிட்டதாக ஐஎஸ்கே அமைப்பபு குற்றம் சாட்டுகிறது. அண்மையில் அமெரிக்காவும் தலீபான்களுக்கும் தோஹாவில் ஒரு உடன்பாடு செய்து கொண்டனர். அதன்படி பயங்கரவாத இயக்கங்களை ஆப்கான் மண்ணில் அனுமதிக்கமாட்டோம் என்று தலீபான்கள் அதில் கூறியிருந்தனர். இந்நிலையில் தலீபான்களை தனித்து எதிர்கொள்ளும் திறன் தங்களுக்கு இருக்கிறது என்று ஐஎஸ்கே அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.