ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணி வெற்றி பெற்றுள்ளது .
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்)கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – ஒடிசா அணிகள் மோதின .இதில் சென்னை அணியில் ஜெர்மன்பிரீத் சிங் 23-வது நிமிடத்தில் மற்றும் மிர்லன் முர்செவ் 63-வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர் .
இதன்பிறகு ஒடிசா அணியில் ஜாவி ஹெர்னான்டஸ் 96-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இறுதியாக 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது .அதோடு புள்ளி பட்டியலில் 11 புள்ளிகளுடன் சென்னையின் எப்சி அணி 4-வது இடத்தில் உள்ளது.