ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணி வெற்றி பெற்றது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் – பெங்களூர் எப்.சி அணிகள் பலப்பரீச்சை நடத்தின.
இதில் மோகன் பகான் அணியில் லிஸ்டன் கோலகோ 45-வது நிமிடத்திலும், மன்விர் சிங் 85-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினார்.ஆனால் பெங்களூரு அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியாக 2-0 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பகான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மோகன் பகான் அணிக்கு அரையிறுதிக்குள் நுழையும்
அதிகரித்துள்ளது.