ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை- ஒடிசா அணிகள் மோதுகின்றன .
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை- ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .
இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றி , ஒரு தோல்வி 2 டிரா என புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது .அதேபோல் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஒடிசா அணி 3 வெற்றி ,2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது .இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.