ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னை – ஏ.டி.கே மோகன் பகான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடந்து வருகிறது .இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின .இதில் ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் மோகன் பகான் அணி வீரர் யின்லிஸ்டன் கோலாகோ ஒரு கோல் அடித்தார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பகான் அணி முன்னிலையில் இருந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை அணி வீரர் விடிமிர் கோமன் 45-நிமிடத்தில் முதல் கோலை பதிவுசெய்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதனிடையே இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை .இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.