12 அணிகள் பங்கேற்கும் 8-வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதல் பாதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் ராய் கிருஷ்ணா 45-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.இதனால் 1-0 என்ற கணக்கில் கொல்கத்தா அணி முன்னிலையில் இருந்தது.இதற்கு பதிலடி கொடுக்க சென்னை அணி கோல் அடிக்க கடுமையாக போராடியது.
ஆனால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.இதுவரை 19- போட்டியில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 10 வெற்றி, 7 டிரா, 2 தோல்வி என 37 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதற்கு முன்பாக ஜாம்ஷெட்பூர், ஹைதராபாத் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்சி-ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன.