8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் சென்னை அணியில் முகமது சஜித் 13-வது நிமிடத்திலும், ஹைதராபாத் அணியில் ஜேவியர் சிவெரியோ 45+4 தலா ஒரு கோல் அடித்தனர். இதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இறுதியாக 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.