ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் எப்.சி அணி வெற்றி பெற்றது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – பெங்களூர் எப்சி அணிகள் மோதின.
இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இதனால் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது .இதன்பிறகு பெங்களூர் அணியில்உதான்டா சிங் 70 நிமிடத்திலும், பிரதிக் சவுத்ரி 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர் . இதனால் 2-4 இறுதியாக என்று கோல் கணக்கில் பெங்களூர் எப்.சி அணி வெற்றி பெற்றது.