ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி வெற்றி பெற்றுள்ளது .
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி – சென்னையின் எப்சி அணிகள் மோதின .
இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாகப் போராடியது .ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 86-வது நிமிடத்தில் மும்பை அணி வீரர் ராகுல் முதல் கோலை பதிவு செய்தார். இதன் பிறகு இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை .இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது.