Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து :ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது மோகன் பகான் அணி….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில்  3-0  என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணி வெற்றி பெற்றது .

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன .இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி , ஈஸ்ட் பெங்கால் அணியுடன் மோதியது .இதில்  3-0  என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஏ.டி.கே. மோகன் பகான் அணி 2-வது வெற்றியை ருசித்தது.

இதையடுத்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் மும்பை சிட்டி – ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில்  3-1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது .இதனிடையே இன்று இரவு 7.30  மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Categories

Tech |