Categories
கால் பந்து விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து : ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது ஒடிசா அணி ….!!!!

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நேற்றிரவு நடந்த 84-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரீச்சை நடத்தின .

இதில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஒடிசா அணி 6-வது வெற்றியை ருசித்தது. ஒடிசா அணியில் 23-வது நிமிடத்தில் ஜோனதஸ் கிறிஸ்டியன் மற்றும் 75-வது நிமிடத்தில் ஜாவி ஹர்னாண்டஸ் லும் ஆகியோர் கோல் அடித்தனர். இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத் – ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.

Categories

Tech |