இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி.அணிகளுக்கிடையான ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 11 அணிகள் பங்கேற்றுள்ளன .இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் பெங்களூரு அணி வீரர் ஆஷிக் குருணியன் 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் .
இதையடுத்து 88-வது நிமிடத்தில் மீண்டும் அவரே சுயகோல் போட்டு தங்கள் அணிக்குரிய வாய்ப்பை பறித்து விட்டார் .இதனால் இறுதியாக 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே இன்று இரவு7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.