ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின .
இதில் கேரளா அணியில் சஹல் சமத் 27-வது நிமிடத்திலும் , அல்வரோ 47-வது நிமிடத்திலும் மற்றும் ஜார்ஜ் பெரேயா 51-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி கேரளா அணி அபார வெற்றி பெற்றது.