Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து :நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை பந்தாடியது ஹைதராபாத் ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது .

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா  தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் போட்டி நடந்து வருகிறது . அதோடு போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வைக்கப்பட்டுள்ளது .இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் 12-வது நிமிடத்தில் ஹைதராபாத் அணி வீரர் சிங்லென்சனா சிங் முதல் கோல் பதிவு செய்தார் . இதையடுத்து 47-வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் பார்த்தலொமியூ 2-வது  கோல் அடித்தார் .

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர் ரால்டே நார்த் 43-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் . இதன்பிறகு 78-வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் பார்த்தலொமியூ மீண்டும் ஒரு கோல் அடித்தார் . இதனால்  3-1  என்ற கோல்  கணக்கில் ஹைதராபாத் அணி முன்னிலையில் இருந்தது. இதையடுத்து 90-நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் ஜாதவ் ஒரு கோலும், 94-வது நிமிடத்தில் சிவேரியோ ஒரு கோலும்அடித்தனர் . இதனால் ஹைதராபாத் அணி 5-1 என்ற  கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Categories

Tech |