ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி அபார வெற்றி பெற்றது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி – ஒடிசா அணிகள் பலப்பரீச்சை நடத்தின.இதில் மும்பை சிட்டி அணியில் இகோர் அங்குலோ, பிபின் சிங் ஆகியோர் தலா 2 கோல் அடித்தனர். இதைதொடர்ந்து ஒடிசா அணி தரப்பில் ஜோனதாஸ் டி ஒரு கோல் அடித்தார்.
இறுதியாக 4-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி மும்பை சிட்டி அணி அபார வெற்றி பெற்றது. இது மும்பை சிட்டி அணிக்கு 7-வது வெற்றியாகும். இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன.