Categories
தேசிய செய்திகள்

இந்து கோவிலை காத்த இஸ்லாமியர்கள்….. பெங்களூருவில் நெகிழ்ச்சி சம்பவம்….!!

பெங்களூருவில்  இஸ்லாமியர்கள் அனுமன் கோவிலை ஒற்றுமையாக காத்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் ஃபேஸ்புக்கில் இஸ்லாமியர்கள் குறித்து  சர்ச்சை கருத்து பதிவிட்டார்.  இதற்கு உடனடியாக சமூக வலைதளங்களில் பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்றிரவு இஸ்லாமியர்கள் இதுகுறித்து கண்டித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டிஜி ஹலி  பகுதியில் உள்ள அனுமன் கோவிலும் இந்த வன்முறை சம்பவத்தில்  தாக்கப்பட்டது.

து குறித்து அறிந்த பிற இஸ்லாமிய மக்கள் களத்தில் நின்று வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்ததோடு, வரிசையாக கைகோர்த்து நின்று கோவிலையும் பாதுகாத்த  செயல் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக எப்போதும் போல், இனம் என பிரிந்தது போதும், மதம் என பிரிந்தது போதும், மனிதம் ஒன்றே தீர்வாகும் என்ற பாடலுடன் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. உண்மையில் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு என்பதால் இந்த செயலுக்கு நாம் மனமார்ந்த பாராட்டைப் தெரிவிப்பதே நற்செயலாகும்.

Categories

Tech |