தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் இல்லத்தில் சந்தித்து பேசி வருகின்றனர். CAA சட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ள நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெற்று வருகின்றது. குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து நடிகர் ரஜினிகாந்துக்கு விளக்கம் தர சந்தித்து பேசி வருகின்றனர்.
முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.