Categories
இந்து உலக செய்திகள்

“இது முஸ்லீம் நாடு” விநாயகர் சிலைகளை உடைத்து தள்ளிய இஸ்லாமிய பெண்…. வைரலாகும் வீடியோ….!!

விநாயகர் சிலையை கீழே போட்டு உடைத்த இஸ்லாமிய பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விநாயகர் அனைவருக்கும் பொதுவானவர். விநாயகர் சிலை அல்லது போட்டோ இல்லாத இந்து மதத்தை பின்பற்றுபவர்களின் வீடுகளை காண இயலாது. இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்ற இந்தியர்களும் அங்கே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். விநாயகர் சதுர்த்தி விழா இந்தியாவைத் தாண்டி உலகிலுள்ள பிற நாடுகளிலும் இதுவரை கொண்டாடப்பட்டு வந்தது.

அதை நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் பக்ரைன் நாட்டின் ஜீப்பர் நகரிலுள்ள கடை ஒன்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அந்த கடைக்குச் சென்ற இஸ்லாமிய பெண் ஒருவர், இது முஸ்லிம் நாடு என அதட்டி சொல்லியபடியே விநாயகர் சிலைகள் அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு உடைத்து நொறுக்கியுள்ளார். இது குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக, அந்தப் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

https://youtu.be/zVJ2zGAwiZk

Categories

Tech |