Categories
உலக செய்திகள்

‘எவ்வளவு அழகாக இருக்கு’….! காணும் இடமெல்லாம் பச்சை வண்ணம்…. ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வு….!!

ஐஸ்லாந்து நாட்டில் அரோரா போரியாலிஸ் என்றழைக்கப்படும் அரிய நிகழ்வால் அனைத்து இடங்கலும் பச்சை நிறமாக காணப்பட்டது.

ஒரு வருடத்தில் குறிப்பிட்ட காலகட்டத்தில் அதுவும் வடதுருவத்திற்குள் நுழையும் சூரிய ஒளிக்கதிர்களை பூமியின் வாயு மண்டலத்துகள்கள் சிதறடிக்கின்றன. இதனால் பச்சை வண்ண ஒளி வீசும். இந்த அரிய நிகழ்வானது ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்கவிக்கில் நடந்துள்ளது. மேலும் இந்த அரிய நிகழ்வினை அரோரா போரியாலிஸ் என்று அழைக்கின்றனர்.

இதனை கண்ட பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் இது போன்று பச்சை நிறமாக காட்சி அளிப்பது அனைவரிடமும் ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |