வருகின்ற 29ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டுமென்றும் , கோலி பண்டிகையை கொண்டாடப்போவதில்லை என பிரதமர் , உள்துறை அமைச்சர் தெரிவித்தனர். மேலும் மாநில அரசுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு சுற்றைக்கை அனுப்பி வருகின்றது. இந்நிலையில் இந்த மாதம் 29ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்படும் நிலையில் ஐ.பி.எல் போட்டியின் பரிசுத்தொகை 50 சதவீதம் குறைக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ளது. ஐ.பி.எல் போட்டிகளில் கோப்ப்பையை வென்று சாம்பியன் , ரன்னர் அப் , அரையிறுதி என 20 கோடி , 12 கோடி , 8.75 கோடி என பரிசுத்தொகை வழங்கப்படுகின்றது.
ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் இது 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. பிசிசிஐ தலைவர் கங்குலி ஐ.பி.எல் அணியின் உரிமையாளர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்துள்ளார் என்ற குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் அனைவரும் சேர்ந்து கங்குலிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் புயலை கிளம்பியுள்ள இந்த விவகாரத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பீதியில் இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் இரத்து ஆகும் நிலையில் பரிசு தொகையை 50 % குறைத்து ஐ.பி.எல் அணி உரிமையாளர்களுக்கு கூடுதல் தலை வலியை கொடுத்துள்ளது. இதனால் ஐ.பி.எல் தொடரை எதிர்நோக்கியுள்ள ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.