ஊரடங்கு உத்தரவு நமக்குத்தான் ஆளும் கட்சிகளுக்கு இல்லையா? என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்..
கொரோனா விவாகரம் தொடர்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி முறையில் நேற்று நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 11 பேர் பங்கேற்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இடதுசாரி கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய ஜனநாயக கட்சி தமொய்தீன்லைவர் ரவி, இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் , மனித நேயம் மக்கள் கட்சி தலைவர், திராவிட கழக கட்சி தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முக ஸ்டாலின், ஊரடங்கு உத்தரவு நமக்குத்தான் ஆளும் கட்சிகளுக்கு இல்லையா? சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டவர்களை ஒரே அறையில் அமர்த்தி ஆலோசனைக் கூட்டம் நடத்தியவர் இதே முதல்வர்தான். அப்போது தெரியவில்லையா ஊரடங்கு உத்தரவு?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.