Categories
மாநில செய்திகள்

என்னடா இது…. இவர்களுக்கு இப்போது…. தமிழ் மீது காதல் வருவதன் அவசியமென்ன…? – கி. வீரமணி…!!

பாஜக தலைவர்களுக்கு தமிழ் மொழியை படிக்கவேண்டுமென்று தமிழ் மீது காதல் பீறிட்டு வருவதாக கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியலை கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தல் பணியை செய்து வருகிறது. ஆளும் பாஜக எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரதமர் மோடி உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சியில், “தமிழ் மொழியை அழகிய மொழி. ஆனால் அதை என்னால் கற்க முடியவில்லை. தமிழ்மொழியைப் படிப்பதற்கு ஆசையாக இருக்கிறது என்று வருத்தம் தெரிவித்தார்.

மேலும் அமித்ஷாவும் இதேபோன்று தமிழை படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் தெரிவித்தார். இது குறித்து கி.வீரமணி கூறுகையில், “ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் தமிழ் மொழியை படிக்க முடியவில்லை என்று வானவில் போல பல வண்ண வேடிக்கை காட்டி வருகிறார்கள். இவர்களுக்கு இப்போதுதான் தமிழ் மீது காதல் பீறிட்டு கிளம்புகிறது. இதற்கான  அவசியமென்ன? உரைகளை தயாரித்துக் கொடுக்கும் தம்பிரான்களுக்கு தேர்தல் வியாபார பண்டமாக மாற்றிட யார் இந்த யோசனையை கொடுத்தார்கள்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Categories

Tech |