சேலத்தில் வீட்டில் தனிமை படுத்தப்பட்ட முதியவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 50 க்கும் அதிகம் என்ற எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்த நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு கொரோனாவரை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது குறிப்பாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களை கட்டாயம் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றது.
இந்நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த 52 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். ஹைதராபாத் சென்ற முதியவர் கடந்த 8 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.