இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட சில மணிநேரங்களில் மீண்டும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.
ஜெருசலேத்தில் இருக்கும் AL-AQSA என்ற மசூதியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். அதன் பின்பு தான் இரு தரப்பினருக்குமிடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் நேற்று இரு நாடுகளும் போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்தது.
من اقتحام قوات الاحتلال بأعداد كبيرة لباحات الأقصى واعتداءاتها على المصلين والمرابطين فيه pic.twitter.com/d2RZP1Rmo8
— القسطل الإخباري (@AlQastalps) May 21, 2021
Footage coming out of Al-Aqsa Mosque compound. pic.twitter.com/e754CpFAxr
— Arwa Ibrahim (@arwaib) May 21, 2021
இதனால் நிம்மதியடைந்த பாலஸ்தீன மக்கள் AL-AQSA மசூதியில், ஒன்று கூடி அதனை கொண்டாடியுள்ளார்கள். அப்போது இஸ்ரேல் படையினர் திடீரென்று அந்த மசூதிக்குள் புகுந்துள்ளனர். அதன் பின்பு பாலஸ்தீன வழிபாட்டாளர்கள் மீது ரப்பர் தோட்டாக்களையும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி கலவரத்தை ஏற்படுத்தினர். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் உருவாகியுள்ளது.