ஜெருசலேமின் கிழக்கு பகுதியில், இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சா மசூதிக்கு அருகில் அவர்களது கல்லறைகளை, இஸ்ரேல் இடித்து தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஜெருசலேமின் கிழக்கு பகுதியில் உள்ள அல் அக்சா மசூதியின் அருகில் இருக்கும் உள்ள Al-Yusufiye என்ற கல்லறை தோட்டத்தில் இருக்கும் இஸ்லாமியர்களின், கல்லறைகளை, இஸ்ரேல், புல்டவுசர்கள் மூலம் இடித்து தள்ளியிருக்கிறது. இதில், அந்த கல்லறையிலிருந்த உடல்களின் எலும்புகள் வெளியில் தெரிந்திருக்கிறது.
பாலஸ்தீன மக்கள் அவற்றை சேகரித்து வந்தனர். சிறிது நேரத்திற்கு பின் அதிகமான பாலஸ்தீன மக்கள் அங்கு திரண்டார்கள். அதன்பின்பு போராட்டம் நடத்தியுள்ளனர். எனவே, இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், அங்கு கூடியிருந்த பாலஸ்தீன மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இத்தாக்குதலில், பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவருக்கு காயம் ஏற்பட்டது.
எனினும், அங்கு பாலஸ்தீன மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நபிகள் நாயகம், மக்கா, மதினா-விற்கு, அடுத்து அல் அஃசா மசூதியில் தான் விண்ணுலக பயணத்தை தொடங்கினார் என்று நம்பப்படுகிறது. இஸ்லாமியர்கள், தங்களின் 3 -ஆம் புனிதத்தலமாக கருதும் மசூதியில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் அங்கு அதிகமான பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.