ஜெருசலேமில் பாலஸ்தீனர்களின் வீடு இடிக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெருசலேமில் மாற்றுத்திறனாளிகளின் பள்ளிக்கூடம் இருந்த இடத்தை கைப்பற்றி சட்டவிரோதமாக வீடு கட்டியிருப்பதாக பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படை வெளியேற்றியது. மேலும் அவர்களின் வீட்டை இடித்துத்தள்ளினார்கள்.
இதனை எதிர்த்து அந்தப்பகுதியில் பாலஸ்தீன மக்கள் திரண்டு இஸ்ரேல் படையை எதிர்த்து போராடினார்கள். அப்போது இஸ்ரேல் படையினர் வன்முறை தாக்குதல் நடத்தி, மக்களை கண்மூடித்தனமாக அடித்து விரட்டியுள்ளனர்.