இஸ்ரேல் நாட்டின் அதிபர் ஐசக் ஹெர்சாக், இன்று தன் அதிகாரபூர்வ இல்லத்தில் வருடாந்திர சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இராணுவ அதிகாரிகளுக்கு வருடாந்திர மேற்கோள்களை வழங்கியுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதி இல்லத்தில் நடக்கும் வருடாந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு, தலைவர்கள், படை வீரர்களுக்கு சிறப்பு பாராட்டுகள் வழங்கப்பட்டது. சுதந்திர தின நிகழ்ச்சி காலை சுமார் 9:30 மணியளவில் ஆரம்பமானது. இதில், IDF தலைமை அதிகாரியான அவிவ் கோஹாவி, தற்போதுள்ள மற்றும் முன்னாள் மூத்த இராணுவ பிரமுகர்கள் போன்றோர் பங்கேற்றனர்.
ஹெர்சாக் அதிபரான பின்பு, சுதந்திர தின விழா, அவரின் முதல் விழாவாகும். ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு தலைமைத் தளபதியான அவிவ் கோஹாவி, நன்றி கூறினார். மேலும், ஜனாதிபதி தன் முகநூல் பக்கத்தில் மரியாதைக்குரிய சிப்பாய்களின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டார்.
சுதந்திர தின நிகழ்வுகள் நேற்று இரவு ஜெருசலேமில் இருக்கும் மவுண்ட் ஹெர்ஸில் அதிகாரப்பூர்வ ஜோதி-ஒளி விழாவில் ஆரம்பித்து இன்றும் தொடர்கிறது. இந்நிகழ்வில், வருடாந்திர பைபிள் வினாடி வினா போட்டியினுடைய கடைசிப் போட்டியானது, அதிபரின் விழாவிற்குப் பின் நடக்கவிருந்தது.
ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் நாள் முழுக்க தேசிய பூங்காக்களையும், அருங்காட்சியகங்களையும் பார்வையிடுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனிடையே, ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், ட்ரோன்களின் ஹால்மார்க் ஃப்ளைஓவர்கள் வானத்தில் பறக்கும் நிகழ்வு காலை 9:30 மணியளவில் நடந்தது.