இஸ்ரேல் நாட்டின் பிரபல செய்தி நிறுவனத்தின் அலுவலகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறக்கப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் கடந்த 2020 ஆம் வருடத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து இரண்டு நாடுகளும் தூதரகத்தின் உறவை மேம்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, இஸ்ரேலின் தூதரகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 29ம் தேதியன்று திறக்கப்படவிருக்கிறது. இஸ்ரேலின் வெளியுறவுத்துறை மந்திரியான யெய்ர் லாப்பிட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டு தூதரகத்தை திறந்துவைக்க உள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் பிரபலமடைந்த செய்தி நிறுவனத்தின் கிளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் திறக்கப்படவுள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த செய்தி நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கள் கிளையை தொடங்குவது இது தான் முதல் தடைவையாகும்.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ப்ராங் மெலு கூறுகையில், எங்கள் நிறுவனத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவாக திறப்பதற்கான செயல்பாடுகள் நடப்பதாக தெரிவித்துள்ளார்.