பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். ஓமன் கடலில் இஸ்ரேல் நாட்டுக்குரிய வணிக கப்பல் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் அதிகாரிகள் நேற்று இரவில் Duqm துறைமுகத்திலிருந்து 175 மைல் தூரத்தில் இஸ்ரேல் நாட்டுக்குரிய வணிகக்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். மேலும் கடற்கொள்ளையர்கள் இத்தாக்குதலை நடத்தவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். அரேபியன் கடலில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரிட்டனின் வர்த்தக அமைப்பு தெரிவித்திருக்கிறது. எனினும் ஓமன் அதிகாரிகள் இத்தாக்குதல் தொடர்பில் அதிகாரபூர்வமாக தகவல் எதையும் வெளியிடவில்லை. சமீபகாலமாக இக்கடற்பகுதியில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் உரிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகிறது.