இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே சமீப காலமாக பயங்கரமான மோதல் வெடித்தது. இதன் விளைவாக இரு தரப்பிலிருந்தும் மாறி மாறி ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சரவை, கடந்த வியாழக்கிழமை அன்று இரு தரப்பினரும் மோதலை நிறுத்த வாக்களித்திருக்கிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் இஸ்ரேல் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல்களை காசா தொடர்ந்தால், அதற்கான பதிலடி கடுமையாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் எச்சரித்திருக்கிறார்.
மேலும் எகிப்து, இந்த இரண்டு நாடுகளுக்குமான போர் நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எகிப்தின் அதிபர் Abdel Fattah al-Sisi, போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த, பாதுகாப்பு பிரதிநிதிகள் இருவரை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.