இஸ்ரேல் அரசு, மிக அதிக தொலைவு பயணித்து தடுக்கக்கூடிய ஏவுகணை தடுப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.
The Arrow Weapon System என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த அமைப்பு, புவியின் மண்டலத்திற்கு வெளியில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான், லெபனான் அல்லது ஹிஸ்புல்லா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் இருக்கும் பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் இதனை ஏற்படுத்தி யிருப்பதாக இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான பென்னி காண்ட்ஸ் கூறியிருக்கிறார்.