Categories
உலக செய்திகள்

வானில் நடந்த மோதல்…. இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு…. சிரிய இராணுவம் வெளியிட்ட தகவல்…!!!

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏவுகணைகள் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸை தாக்க முயன்ற போது, வானிலேயே அவை அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏவுகணைகள் டமாஸ்கஸ் நகரத்தின் முக்கியமான பகுதிகள் மற்றும் வீடுகளை தாக்க முயன்றுள்ளது. எனவே, சிரிய விமானங்கள் பதில் தாக்குதல் நடத்தி வானிலேயே அந்த ஏவுகணைகளை அழித்ததாக சிரியாவின் ராணுவம் கூறியிருக்கிறது.

அதே சமயத்தில் சிரியா நாட்டில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிக்குள் விமான எதிர்ப்பு ஏவுகணை நுழைந்திருக்கிறது. அதிக சத்தத்துடன் வந்த அந்த விமானமானது, வானில் தானாகவே வெடித்து சிதறியது என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது.

Categories

Tech |