பாலஸ்தீன அரசு விரைவாக காலாவதியாகும் தடுப்பூசிகளை அனுப்பியிருப்பதால் இஸ்ரேல் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் பின்தங்கியிருக்கிறது. எனவே இஸ்ரேல் தங்கள் நாட்டில் 50 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திவிட்டதால், தங்களிடம் காலாவதியாக போகும் நிலையில் இருக்கும் பைசர் தடுப்பூசிகள் 1 மில்லியன், பாலஸ்தீனத்திற்கு அனுப்புவதாகவும் உடனடி தேவைக்கு பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவித்திருந்தது.
அதற்கு பதிலாக இந்த வருடத்தின் கடைசியில், பைசர் தடுப்பூசிகள் திரும்ப வழங்கினால் போதும் என்று தெரிவித்திருந்தது. அந்த ஒப்பந்தத்தை பாலஸ்தீனம் ஏற்றுக்கொண்டது. எனவே முதலில் 90 ஆயிரம் தடுப்பூசிகளை இஸ்ரேல் அனுப்பியது. எனினும் அந்த தடுப்பூசிகள் எளிதில் காலாவதியாகும் நிலையில் இருந்துள்ளது.
அதற்குள் அந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த தேவையான நேரமில்லாததால், தங்களுக்கு வேண்டாம் என்று கூறியுள்ளனர். எனவே இந்த ஒப்பந்தம் இத்துடன் நீக்கப்படும் என்று பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காலாவதியாக போகும் மருந்துகளை வாங்குவதற்கு மாற்றாக பைசர் நிறுவனத்திடமிருந்து புதிய தடுப்பூசிகளை வாங்குவது மேலானது என்று தெரிவித்திருக்கிறார்கள்.