Categories
உலக செய்திகள்

பரபரப்பான அரசியல் களத்திலும்… புதிய அதிபர் தேர்வு… பிரபல நாட்டில் வெளியான தகவல்..!!

அரசியல் களம் மிகப் பரபரப்பாக நிலவி வரும் சூழலில் இஸ்ரேலின் புதிய அதிபராக ஐசக் ஹெர்சாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலில் நான்கு முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் பிரதமராக பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து இருந்து வருகிறார். இந்நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அங்கு திடீர் திருப்பமாக தேசிய ஒற்றுமை அரசை நிறுவ தீர்மானித்துள்ளன. இதனால் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து நீண்டகாலமாக இருந்து வரும் பிரதமர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அரசியல் களம் இஸ்ரேலில் மிக பரபரப்பாக நிலவி வரும் சூழலில் அதிபர் ரூவனுக்கு அடுத்த மாதம் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு இஸ்ரேல் நாடாளுமன்றம் அதிபரைத் தேர்வு செய்வதற்காக நேற்று கூடியது. அதில் ஒரு முக்கிய இஸ்ரேலிய குடும்பத்தின் வாரிசும், மூத்த அரசியல்வாதியுமான ஐசக் ஹெர்சாக் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், இஸ்ரேல் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் 60 வயதான ஐசக் ஹெர்சாக் இருந்துள்ளார்.

இவர் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவை 2013-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் முன்னாள் அதிபரான இவருடைய தந்தை சைம் ஹெர்சாக் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதராக இருந்துள்ளார். அதேபோல் அரசின் முக்கிய பதவிகளை ஐசக் ஹெர்சாக்கின் தாத்தா, மாமா ஆகியோரும் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |