இஸ்ரேல் அரசாங்கம் கொரோனாவின் தொடர் அலையை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு 4 ஆவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த பரிந்துரை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா சீனாவிலிருந்து தோன்றி அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசிகளை செலுத்தும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
ஆனால் கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளிலும் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியை தவிர்த்து உருமாற்றமடைந்து மென்மேலும் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே உலகிலேயே அதிகளவு கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்திய நாடாக இஸ்ரேல் அரசாங்கம் உள்ளது.
அந்நாட்டில் கொரோனா குறித்த தடுப்பூசிக்கான 3 ஆவது பூஸ்டர் டோஸ்ஸை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் போட்டு கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனாவின் தொடர் அலை பரவாமலிருக்க கொரோனா குறித்த தடுப்பூசியின் 4வது பூஸ்டர் டோஸ்ஸை பொதுமக்களுக்கு செலுத்த இஸ்ரேல் அரசாங்கம் பரிந்துரை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.