Categories
உலக செய்திகள்

இவர்கள் தீவிரவாத இயக்கம்…. தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் அமைப்பினர்கள்…. பதிலடி கொடுத்த இஸ்ரேல்….!!

இஸ்ரேல் நாட்டால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பினர்களின் பல முக்கிய பகுதிகளின் மீது அந்நாட்டின் விமான படையினர்கள் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக வான்வெளித் தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனர்களுக்குமிடையே ஜெருசலேம் தொடர்பாக பல காலங்களாக கடுமையான சண்டை நிலை வருகிறது. இதனையடுத்து இஸ்ரேல் அரசாங்கம் காசா முனையில் வாழும் பாலஸ்தீன பொதுமக்களை ஆளும் ஹமாஸ் அமைப்பினை தீவிரவாத இயக்கமாக கருதுகிறது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசாங்கத்தால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பினர்கள் அந்நாட்டின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பாக வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக காசா முனையை ஆளும் ஹமாஸ் அமைப்பினர்களின் பல முக்கிய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நாட்டின் விமானப்படையினர்கள் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

Categories

Tech |