இஸ்ரேலில் உள்ள ஒரு சதுக்கத்தில் சுத்தமான 24 காரட் தங்க நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
9ஆம் நூற்றாண்டில் உபயோகிக்கப்பட்ட சுத்தமான 24 கேரட் தங்க நாணயங்கள் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னதாக உள்ள தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு சதுக்கத்தில் இளைஞர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அங்கு ஒரு மண்பானையில் நிறைய தங்க காசுகள் நிரப்பப்பட்டு இருந்தது.
அதனை ஆராய்ச்சி செய்து பார்த்த போது அது சுத்தமான தங்க காசுகள் என தெரியவந்தது மேலும் அந்த மண் பானையில் 425 தங்க காசுகள் இருந்தன. இந்த ஆராய்ச்சியின் மூலம் முந்தைய காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் வர்த்தகத்திற்கு மாற்றாக தங்கத்தின் பயன்பாடு இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.