3வது தவணை தடுப்பூசியை 60 வயது மேலுள்ளவர்களுக்கு செலுத்த போவதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸ் கிருமியானது தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே வருவதால் இரண்டு தவணைகளுக்கு மேலாக மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்துவது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் அரசும் இது தொடர்பாக முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அதில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை போடபோவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்த நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியானது 60 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு 3 வது தவணையாக செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதனை இஸ்ரேல் நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட் தொடங்கி வைக்கவுள்ளார். இதில் முதல் பூஸ்டர் தடுப்பூசி ஆனது அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சோக்கிற்கு செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரேல் நாட்டில் 57 % பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தீவிர ஊரடங்கை அமல்படுத்தாமல் இருக்கவே தடுப்பூசி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என அந்நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.